வயிறு சுத்தத்தை மேம்படுத்தும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்!! ஒருமுறை குடிங்க.. மொத்த கழிவும் அடுசிகிட்டு வந்திடும்!!

0
142

நாம் உண்ணும் உணவுகளின் கழிவுகள் வயிற்றில் தேங்கினால் வயிறு வலி,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே வயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகளை அகற்ற தினமும் காலை நேரத்தில் கீழ்கண்ட பானங்களில் ஒன்றை செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெது வெதுப்பான நீர் – ஒரு கிளாஸ்
2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் பாதியின் சாறை பிழிந்து கொள்ள வேண்டும்.

இந்த பானத்தை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் செய்து பருகினால் வயிற்றில் உள்ள கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)திரிபலா சூரணம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – 150 மில்லி

செய்முறை:-

பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி திரிபலா சூரணம் ஒரு தேக்கரண்டி சேர்த்து கலக்கி குடித்தால் வயிற்றில் உள்ள மொத்தக் கழிவுகளும் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை:-

ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி விளக்கெண்ணெய் சில துளிகள் சேர்த்துப் பருகினால் வயிற்றில் உள்ள கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)வெது வெதுப்பான தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)நெய் – கால் தேக்கரண்டி

செய்முறை:-

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி நெய் சேர்த்து பருகினால் வயிறு சுத்தமாகும்.அதேபோல் சூடான பாலில் சில துளிகள் சேர்த்து பருகினால் வயிற்றில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை:-

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் வயிற்றில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பல் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை:-

  • பூண்டு பற்களை நசுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடித்து பருகினால் வயிற்றில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
Previous articleவிறைப்புத் தன்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆண்கள்.. இந்த வேரை பாலில் சேர்த்து பருகுங்கள் போதும்!!
Next articleஉடல் எடையை குறைக்கும் வாழைப்பழ பால்!! தினம் ஒரு கிளாஸ் குடிங்க.. 30 நாளில் பலனை காணுங்கள்!!