ஹெல்த் டிப்ஸ்: உணவில் உப்பு அதிகம் சேர்க்கிறீங்களா? இந்த பழக்கம் ரொம்ப தப்புங்க!!

Photo of author

By Divya

ஹெல்த் டிப்ஸ்: உணவில் உப்பு அதிகம் சேர்க்கிறீங்களா? இந்த பழக்கம் ரொம்ப தப்புங்க!!

உப்பு இல்லாத உணவு குப்பைக்கு சமம் என்பது முன்னோர்களின் கருத்து.சமைக்கும் பொழுது சரியான அளவு உப்பு சேர்க்காவிட்டால் அந்த உணவின் சுவையே மாறி விடும்.ஆனால் உண்ணும் உணவில் நம் உடலுக்கு தேவைப்படும் அளவு உப்பு இருக்க வேண்டும்.அவை குறைந்தாலும்,அதிகரித்தாலும் நம் உடலுக்கு தான் ஆபத்து.

நம் இந்தியர்கள் தங்கள் உணவில் அதிகளவு உப்பு சேர்த்து சாப்பிடவே விரும்புகின்றனர்.இதனால் பல வித உடல் உபாதைகளை சந்திக்க தொடங்கி விடுகின்றனர்.அதிகப்படியான உடல் உழைப்பால் உடலில் இருக்கின்ற சோடியம் வியர்வை வழியாக வெளியேறி விடும்.இதனால் உடல் உழைப்பு போடுபவர்களுக்கு சோடியம் தேவைப்படும்.இவர்கள் உணவில் தேவையான அளவு உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.

ஆனால் சிலருக்கு அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்வதால் சில நோய் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கி விடும்.

உணவில் அதிகளவு உப்பு சேர்ப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்:

1)அதிகம் உப்பு சேர்த்த உணவை உண்டு வந்தால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.

2)உப்பு உணவு சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கி விடும்.உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால் சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்றி விடுங்கள்.இல்லையேல் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

3)உணவில் அதிகளவு உப்பு சேர்ப்பதால் உடல் வலி அதிகமாகும்.உப்பு நரம்பு மண்டலத்தை அதிகளவு பாதிக்கிறது.இதனால் தசைப்பிடிப்பு,தசை வலிகள் ஏற்படுகிறது.

4)அதிகளவு உப்பு நம் உடல் எலும்புகளில் இருக்கின்ற கால்சியத்தை அரித்து எடுத்துவிடும்.இதனால் எலும்பு தேய்மானம்,எலும்பு பலவீனமடைதல்,எலும்பு முறிவு,முதுகு வலி,மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.