முதுமையை தாமதப்படுத்தும் அற்புதமான நாட்டு மருத்துவம்!

Photo of author

By Kowsalya

நாம் அனைவருமே என்றும் இளமையாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசையாக இருக்கும். முதுமை அடைவதை தாமதப்படுத்தும் அற்புதமான இயற்கை முறையை தான் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

பூண்டு 10 பல்

10 எலுமிச்சை பழச்சாறு

ஒரு கிலோ ஆர்கானிக் தேன்

செய்முறை:

1. முதலில் 10 பல் பூண்டை எடுத்து தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. இப்பொழுது ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அதில் எலுமிச்சை பழ சாறு மற்றும் தேன் ஆகியவற்றை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் படி ஊற்றிக் கொள்ளவும்.

3. இந்த கலவையில் நறுக்கி வைத்த பூண்டை போடவும்.

4. இந்த கலவை கண்ணாடி ஜாடியில் பத்து நாட்கள் ஊற வேண்டும்.

5. ஊறிய பிறகு ஒரு டீஸ்பூன் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் மாலையில் உணவுக்கு முன்பும் எடுத்து வரும் பொழுது எந்த நோயும் உங்களை அண்டாது.

இந்த கலவையானது நீண்ட ஆயுளுக்கும், முதுமையை தாமதப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகின்றது.

தினந்தோறும் இதனை சாப்பிட்டு வாருங்கள். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.