பெண்கள் தங்கள் 30 வயதில் உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்வது போல் ஆண்கள் தங்கள் 35-40 வயதில் ஆரோக்கிய கோளாறை சந்திக்கின்றனர்.பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்கள் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றனர்.
தொப்பை விழுதல்,வழுக்கை விழுதல்,உடல் பெருத்து போதல் பிரச்சனையை பெரும்பாலான ஆண்கள் எதிர்கொள்கின்றனர்.அதேபோல் நடக்க முடியாமல் போதல்,உடல் களைப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கின்றனர்.35 வயதை தாண்டிய ஆண்கள் நிச்சயம் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும்.
இதற்கு நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.35 வயதை கடந்த ஆண்கள் தங்கள் உடல் எடை பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.தினசரி உடற்பயிற்சி,நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் கொழுப்பை கட்டுப்படுத்தலாம்.
யோகா,தியானம்,உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.எலும்பு வலிமையை அதிகரிக்க கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
அதிக கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.எண்ணையில் வறுத்த,பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடலாம்.35 வயதை கடந்த ஆண்கள் புரோபயாட்டிக் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
நீராகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.புரதம் மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.மது மற்றும் புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.இரத்த சர்க்கரை அளவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வேண்டும்.
பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களை சாப்பிட வேண்டும்.அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.இரத்தத்தில் கொழுப்பு படியாமல் பார்த்துக் கொள்ளா வேண்டும்.ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும்.மூலிகை பானங்களை அதிகம் பருக வேண்டும்.