HEALTH TIPS: சமையலுக்கு ரீஃபைண்ட் ஆயில் யூஸ் பண்றவங்க அதன் உண்மைத்தன்மை தெரிஞ்சிக்க இதை கொஞ்சம் படிங்க!!

Photo of author

By Divya

HEALTH TIPS: சமையலுக்கு ரீஃபைண்ட் ஆயில் யூஸ் பண்றவங்க அதன் உண்மைத்தன்மை தெரிஞ்சிக்க இதை கொஞ்சம் படிங்க!!

Divya

நம் அன்றாட சமையலில் பல்வேறு வகையான எண்ணெய் பயன்படுத்தி ருசியான உணவுகள் செய்து சாப்பிட்டு வருகின்றோம்.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கடலை எண்ணெய்,எள் எண்ணெய்விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவையே அதிக பயன்பாட்டில் இருந்தது.

ஆனால் தற்பொழுது பாம் ஆயில்,ரீஃபைண்ட் ஆயில்,ஆலிவ் ஆயில் போன்றவற்றை மக்கள் அதிகளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.இதில் பெரும்பாலான மக்கள் ரீஃபைண்ட் ஆயிலையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரீஃபைண்ட் ஆயில் இதர எண்ணெய்களை ஒப்பிடுகையில் விலை மலிவாக கிடைப்பதால் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்று அழைக்கப்படும் ரீஃபைண்ட் ஆயில் இதய ஆரோக்கியத்தை காக்கும் என்று நம்பக் கூடிய விளம்பரங்களால் மக்கள் அதை யோசிக்காமல் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

உடல் பருமன்,கொலஸ்ட்ரால்,இதயம் சம்மந்தபட்ட பிரச்சனை இருப்பவர்கள் பெரும்பாலும் ரீஃபைண்ட் ஆயிலை தான் பயன்படுத்துகின்றனர்.ஆனால் உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் உடலுக்கு பல பக்க விளைவுகளை கொடுக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரீஃபைண்ட் ஆயில் தீமைகள்:

நீங்கள் அளவிற்கு அதிகமாக ரீஃபைண்ட் ஆயில் பயன்படுத்தினால் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

தொடர்ந்து ரீஃபைண்ட் ஆயில் பயன்படுத்தி வந்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.ரீஃபைண்ட் ஆயில் உணவுகளை சாப்பிடுவதால் உடலில் எல்டிஎல் என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும்.அதிகளவு ரீஃபைண்ட் ஆயில் பயன்படுத்தினால் உடலில் கேன்சர் செல்கள் உருவாகிவிடும்.

ரீஃபைண்ட் ஆயிலுக்கு மாற்று என்ன?

நீங்கள் ரீஃபைண்ட் ஆயிலுக்கு பதில் கடுகு எண்ணெய்,நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.அதேபோல் வேர்க்கடலை எண்ணெய்,ஆளிவிதை எண்ணெய் அல்லது அவகோடா எண்ணையை பயன்படுத்தலாம்.