நமது உடல் ஆரோக்கியம் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறையை பொறுத்து இருக்கிறது.நாம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
அந்தவகையில் நன்மைகள் நிறைந்த தேங்காய் பால்,தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் பருகி வந்தால் பி[பல நோய்கள் குணமாகும்.
தேங்காய் பால் அத்தியாவசிய சத்துக்கள்:
**வைட்டமின் சி
**நல்ல கொழுப்பு
**இரும்புச்சத்து
**பொட்டாசியம்
**வைட்டமின் சி
**வைட்டமின் பி
**கால்சியம்
**மெக்னீசியம்
**வைட்டமின் இ
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப்
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
1.உடைத்த தேங்காயில் அரை மூடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் பருப்பை மட்டும் கத்தி கொண்டு வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளலாம்.
2.பிறகு மிக்சர் ஜார் எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய் துண்டுகளை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
3.இதை நன்றாக அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த தேங்காய் பாலில் சிறிதளவு பனங்கற்கண்டு,ஏலக்காய் தூள் சேர்த்து காலை வேளையில் பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தேங்காய் பால் தீர்க்கும் நோய்கள்:
**தினமும் தேங்காய் பால் பருகி வந்தால் வயிற்றுப்புண்,உடல் சூடு தணியும்.
**தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முதுகு தண்டை வலிமைப்படுத்துகிறது.முதுகு வலி,முட்டி வலி,இடுப்பு வலி இருப்பவர்கள் இந்த பாலை தினமும் பருகி வந்தால் தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தேநீர்,காபி போன்ற ஆரோக்கியமற்ற பானங்களுக்கு பதிலாக இந்த தேங்காய் பாலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தேங்காய் பாலை தொடர்ந்து பருகி வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.குடலில் காணப்படும் தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க தேங்காய் பால் பருகலாம். இதில் இருக்கின்ற கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.