தொப்பையை குறைக்க வேண்டுமா? தேங்காயை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

Photo of author

By Pavithra

தொப்பையை குறைக்க வேண்டுமா? தேங்காயை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

தேங்காயை நாம் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக தான் அறிந்திருப்போம் ஆனால் தேங்காயை இப்பிடிச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதுமட்டுமின்றி நாம் அன்றாட உணவில் தேங்காயை சேர்த்துக் கொள்வதினால் உடலின் பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக அமையும்.

தேங்காயில் பாஸ்பரஸ், இரும்பு சத்து உள்ளிட்ட தாதுப் பொருட்கள்,புரதச் சத்து, கால்சியம்,மாவுச்சத்து,நார்ச்சத்து,கொழுப்புச்சத்து போன்ற உடல் இயக்கத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் தேங்காயில் உள்ளன.இதுமட்டுமின்றி தேங்காயில் தாய்ப்பாலில் மட்டுமே இருக்கக்கூடிய மோனோ லாரிக் என்ற சத்து தேங்காயில் மட்டுமே உள்ளது.தேங்காயை உடைத்து அரை மணி நேரத்திற்குள் சாப்பிட்டு வந்தால் (fresh coconut piece)உடலில் கீழ்கண்ட நோய்களுக்கு மருந்தாக விளங்கும்.

* தேங்காயில் உள்ள அதிகப்படியான ஃபேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைய முக்கியமாக வழிவகுக்கிறது.

இது மட்டுமின்றி உடலில் அதிகப்படியான கொழுப்பு வயிற்றில் தேங்கி தொப்பையாக மாறுகிறது.இந்த தொப்பையை குறைக்க தினமும் காலையில் அரை மணி நேரத்திற்குள் உடைத்த பச்சை தேங்காயை ஒரு கீற்று சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் கரைத்து தொப்பையை எளிதில் குறைக்க இந்த தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

* தினமும் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும்.இதனால் மூட்டு வலி, எலும்பு தேய்மானம்,பற்கள் தேய்மானம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

* தேங்காயில் உள்ள அதிகப்படியான லாரிக் அமிலம் நமது ரத்தத்தில் கலந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இதுமட்டுமின்றி உடலில் நுண்கிருமிகள் தோன்றாதவாறு நம்மை பாதுகாக்கும்.

* தேங்காயில் உள்ள கால்சியம் மக்னீசியம் பொட்டாசியம் போன்ற தாது சத்துக்கள் அதிகமுள்ளதால் உடலின் அதிகப்படியான நீர் இழப்பை தடுக்கும்.மேலும் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும்.

* சிறுநீரக தொற்று உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் ஒரு கீற்று தேங்காயை மென்று சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் குணமடையும்.

* அல்சர் உள்ளவர்கள் தினமும் தேங்காயை சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்சனையில் இருந்து விரைவில் குணமடையலாம்.

* தினமும் தேங்காய் சாப்பிட்டு வந்தால் முடி அடர்த்தியாக வளர்வதோடு இளநரை விழாமல் தடுக்கும்.

* தேங்காயில் உள்ள உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய கொழுப்பு மற்றும் எண்ணெய் தன்மை தோலில் பளபளப்பை ஏற்படுத்துவதோடு சரும சுருக்கத்தை அடியோடு போக்கும்.

* வாய்ப்புண் உள்ளவர்கள் ஒரு கீற்று தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடனடியாக குணமடையும்.

* தேங்காயுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வருகையில் ஆண் மலட்டுத்தன்மை முற்றிலும் குணமாகும்.