ஒருமுறை சாம்பாரை இப்படி செய்து பாருங்கள்:!! இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது! பிரிட்ஜ் தேவையில்லை!

0
203

ஒருமுறை சாம்பாரை இப்படி செய்து பாருங்கள்:!! இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது! பிரிட்ஜ் தேவையில்லை!

தாய்மார்கள் அனைவரும் பருப்பு சாம்பாரை செய்தவுடன் புளித்து விடும் என்று ஃப்ரிட்ஜில் எடுத்து வைப்பார்.இந்த ட்ரிக்ஸ்-சை யூஸ் பண்ணினால் இரண்டு நாட்கள் ஆனாலும் பருப்பு குழம்பு புளித்துப் போகாது கெட்டும் போகாது.ஒரு முறை இதுபோன்று செய்து பாருங்கள்.

1.பருப்பை வேகவைக்கும் பொழுது குக்கரில் வேக வைக்காமல்,பாத்திரத்தில் வேகவைத்து கடைந்தால்,
பருப்பின் வழவழப்பு தன்மை நீங்கி குழம்பு சீக்கிரம் நுரைத்துப் போவதை தடுக்கும்.

2.பருப்பு சாம்பாரை தாளிக்கும் பொழுதே புளி கரைச்சல் ஊற்றிவிடாமல்,தாளித்து சாம்பார் கொதித்து வரும்பொழுது புளிக்கரைசலை ஊற்றி புளியின் பச்சை வாசம் போகும் வரை மட்டுமே கொதிக்கவிட்டு எடுத்து வைத்தால் சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்கும்.மேலும் ருசியாகவும் இருக்கும்.அதிக நேரம் சாம்பரை கொதியவிட்டால், ருசி மாறிவிடும்.

3.பருப்பு சாம்பார் வைத்தவுடன் ஒரு வேளைக்கு மட்டும் வைத்துவிட்டு மீதி சாம்பாரை வேறொரு பாத்திரத்தில் மாற்றி விட்டால் குழம்பு புளிக்காது.
எந்த குழம்பாயினும் கரண்டியை விட்டு குழப்ப குழப்ப எளிதில் குழம்புகள் புளித்துவிடும்.
அதிலும் பருப்பு சாம்பார் மிக விரைவில் புளித்துவிடும்.

4.காலையில் வைத்த பருப்பு சாம்பார் இரவு வரை வந்து மீதம் ஆகிவிட்டால் அதனை ஒரு தடவை சூடுபடுத்தி அந்த சூடு ஆறிய பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுள் பருப்பு சாம்பார் வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து விட்டால் குழம்பு கெடாது.இதற்கு பிரிட்ஜ் தேவையே இல்லை.மேலும் பருப்பு குழம்பு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்தால் வழவழப்பு தன்மை வந்துவிடும் குழம்பின் டேஸ்டே போய்விடும்.

இந்த முறையில் ஒரு டைம் நீங்கள் பருப்பு சாம்பார் செய்து பாருங்கள்.அப்புறம் இதே முறையில்தான் குழம்பு வைப்பீர்கள்.

Previous articleநீங்கள் பூஜை அறையில் இந்த முறையில் சாமி படங்கள் வைத்திருக்கின்றீர்களா? உடனடியாக அதனை மாற்றங்கள்!
Next articleவீண் விரயத்தை குறைக்கும் பரிகாரம்!