ஒரு சொட்டு எண்ணெய் போதும் உடலின் ஒட்டு மொத்த நோய்க்கும் தீர்வு:! தொப்புள் வைத்தியம்!
தொப்புளில் எண்ணெய் வைத்தால் உடல் சூடு குறையும் என்பது பல பேர் அறிந்ததே. ஆனால் நாம் தொப்புளில் வைக்கும் ஒவ்வொரு விதமான எண்ணைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்பதும், இதனால் நம் உடலில் பல்வேறு நோய்களுக்கு தீர்வு கேட்கும் என்பதும் நாம் பலபேர் அறிந்தராத ஒரு விஷயமாகும்.
தொப்புளில் எந்த எண்ணை வைத்தால் என்ன நோய் குணமாகும் என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெய்: மூன்று சொட்டு தேங்காய் எண்ணையை வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் தோல் வறட்சி நீங்கும்.
விளக்கெண்ணெய்: மூன்று சொட்டு விளக்கெண்ணெய் வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்து வந்தால் முழங்கால் வலி,மூட்டு வலி,கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிட்டும்.மேலும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வாக அமையும்.
வேப்பெண்ணை: மூன்று சொட்டு வேப்பெண்ணையை வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்து வந்தால்,சருமம் சம்பந்தப்பட்ட வியாதிகளும்,உடலில் உள்ள தொற்று நோய்க் கிருமிகளும் அழியும்.மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும்.
ஆலிவ் ஆயில்: மூன்று சொட்டு ஆலிவ் ஆயில் வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தீராத வயிற்று வலியை ஒரே நாளில் தீர்த்து விடும்.