ஒரே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடை குறைய வேண்டுமா? இதை குடித்தாலே போதும்!

Photo of author

By Pavithra

ஒரே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடை குறைய வேண்டுமா? இதை குடித்தாலே போதும்!

தொப்பையை குறைக்க பலரும் பலவிதமான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றன.
இருந்தபோதிலும் பெரிதாக பயன்கிடைத்த பாடில்லை.விரைவில் உடல் எடை மற்றும் தொப்பை குறைய இந்த நீரை ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை குடித்தாலே போதும்.உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைத்து விரைவில் உங்களை ஸ்லிம்மாக மாற்றி விடும்.

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைக்க இந்த நீர் நல்ல பயனளிக்கும்.இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சீரகம்: கால் கப்

சோம்பு: கால் கப்

வெந்தயம்: இரண்டு டீஸ்பூன்

தண்ணீர்: 150மில்லி

இந்தப் பொருட்களின் அளவு ஒரு மாதத்திற்கு பயன்படுத்தும் அளவாகும். (தண்ணீரை தவிர்த்து)

செய்முறை:

கால் கப் சீரகம் மற்றும் கால் கப் சோம்பு இவற்றுடன் இரண்டு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இது ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த அரைத்த பவுடரை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு காற்று போகாதவாறு வைக்க வேண்டும்.

150 மில்லி தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்பு இந்த தண்ணீரில் அரை டீஸ்பூன் அளவு அரைத்து வைத்த பவுடரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.சுடுநீரில் இந்த பவுடரை சேர்த்து ஐந்திலிருந்து பத்து நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.

பிறகு இதனை வெதுவெதுப்பான சூட்டில் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலை வெறும் வயிற்றில் குடித்து வருகையில் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடல் எடையையும் மற்றும் தொப்பையையும் குறைக்க உதவுகிறது.

மேலும் இந்த தண்ணீர் நெஞ்செரிச்சல்,வயிற்று கோளாறு,அஜீரண கோளாறு வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக அமையும்.