குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீராத சளி ஒரே இரவில் மலம்வழிய வரவேண்டுமா? இது ஒன்றே போதும்!!

Photo of author

By Pavithra

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீராத சளி ஒரே இரவில் மலம்வழிய வரவேண்டுமா? இது ஒன்றே போதும்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும்,ஆஸ்துமா நுரையீரல் பிரச்சனை சைனஸ் அலர்ஜி சளி நெஞ்சு சளி இரும்பல் தொண்டை வலி உள்ளிட்ட நுரையீரல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தேனில் ஊற வைத்த வெங்காயம் ஒரு நல்ல மருந்தாக அமையும்.குறிப்பாக நெஞ்சு சளி சாதாரண சளி உள்ளிட்ட பிரச்சனைகள் ஒரே இரவில் தீர இது அருமருந்தாக அமையும்.

தேன் கலந்த சின்ன வெங்காயம் செய்வது எப்படி?

தேவையான அளவு தோல் உரித்த சின்ன வெங்காயத்தை நன்றாக கழுவி ஈரப்பதம் போகும் வரை உளர்த்தி விட வேண்டும் பிறகு இதனை சிறிதாக கீறி கண்ணாடி பாத்திரத்தில் போட்டு விடவும்.பிறகு எடுத்துக்கொண்ட வெங்காயத்திற்கு தேவையான அளவு தேன் கலந்து இரண்டு நாட்கள் கைப்படாமல் அப்படியே வைத்து விட வேண்டும்.இரண்டு நாட்களுக்குப் பிறகு இதனை எடுத்து சாப்பிட்டு வந்தால் கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக அமையும்.

பயன்கள்:

இரவு நேரத்தில் இந்த தேனில் ஊற வைத்த வெங்காயத்தை 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட்டு படுத்தால் காலையில் மலம் வழியே நெஞ்சில் கட்டிய அனைத்து சளியும் வந்துவிடும்.

இதனை தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

மூச்சு பிரச்சனை ஆஸ்துமா போன்ற நுரையீரல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வாக அமையும் இதனை தினமும் எடுத்துக் கொண்டால் நுரையீரல் சம்பந்தமான எந்த பிரச்சனையும் உங்களை நெருங்காது.