நரம்பு தளர்ச்சி, பக்கவாதம் சரவாங்கி நீங்க! உளுந்து தைலம்!

Photo of author

By Kowsalya

இந்த உளுந்து தைலம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது. இதனை நாள்தோறும் உடலுக்கும் தலைக்கும் தேய்த்து குளித்துவர தசை எலும்புகள் உறுப்புகள் வலிமையும் மற்றும் மிக பலத்தையும் பெரும். அத்துடன் நரம்புத் தளர்ச்சியினால் வரும் கை கால் நடுக்கம் மற்றும் நடுக்குவாதம் முக வாதம் ஆகியவை நீங்கும்.

அதற்கான வழிமுறைகளும் எப்படி செய்யலாம் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. கருப்பு உளுந்து 100 கிராம்

2. நல்லெண்ணெயை ஒரு படி

3. பசும்பால் ஒரு படி

4. பூனைக்காலி

5. சதகுப்பை

6. சித்திரத்தை

7. சுக்கு மிளகு திப்பிலி

8. வெப்பாலை

9. பட்டை

10. இந்துப்பு

11. வசம்பு

12. அதிமதுரம்

 

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுந்தை மேல் தோல் நீக்காமல் நூறு கிராம் எடுத்துக்கொள்ளவும்.

2. அதை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

3. உளுந்தில் இரண்டு படி அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

4. இப்பொழுது அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்சி 1 படி அளவு சுண்டக் காய்ச்சி உளுந்து கஞ்சியை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

5. மீண்டும் இரண்டு படி அளவு தண்ணீர் ஊற்றி கஞ்சியை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

6. ஒரு பானையில் உளுத்தங்கஞ்சி இரண்டு படி, நல்லெண்ணெய் ஒரு படி, பசும்பால் ஒரு படி மூன்றையும் ஊற்றி கொள்ளவும்.

7. இதனுடன் சதகுப்பை, சித்திரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, வசம்பு பட்டை ,அதிமதுரம், பூனைக்காலி, வெப்பாலை ஆகியவை ஐந்து கிராம் வீதம் எடுத்து பசும்பாலுடன் அரைத்து தைல பானையில் உள்ள எண்ணெயுடன் கலந்து கொள்ளவும்.

8. சிறு தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கருக விடாமல் காய்ச்சவும்.

9. நீர் சுண்டி கைல பதத்திற்கு வரும் பொழுது இறக்கி விடவும்

10. வடிகட்டி எண்ணெயை ஆற வைத்து விட்டு பின் அதை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

 

இந்த தைலம் ஆனது நரம்புத் தளர்ச்சியினால் வரும் கை கால் நடுக்கம், பக்கவாதம், முகவாதம், சரவாங்கி, பக்கவாதம், தோள்பட்டை, தண்டுவடம், மூட்டு வலி, என அனைத்தையும் நரம்பு வலி பிடிப்பு ஆகியவற்றை சீக்கிரமாக சரி செய்யும்.

தலை முதல் கால் வரை பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையும் ஆண்கள் புதன் சனி கிழமையும், தேய்த்து குளித்து வர அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். தசைகளும் வலிமை பெறும். உடல் அசதி நீங்கும். புத்தி தெளிவு ஞாபகசக்தியும் கண்பார்வையும் பிரகாசம் அடையும்.