Health Tips: உங்களுக்கு வலது பக்க அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட இதுதான் காரணம்!!

0
129

இன்று பலருக்கும் அடிவயிற்று பகுதியில் வலி,இடது மற்றும் வலது பக்க அடிவயிற்றில் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.ஓர் இடத்தில் இருந்து உடலை நகர்த்தும் பொழுது கடுமையான வலியை அனுபவிக்கலாம்.

வலது பக்க அடி வயிற்று பகுதியில் வலி ஏற்பட காரணங்கள்:

**குடல்வால் அலர்ஜி
**சிறுநீரக கல் பிரச்சனை
**மாதவிடாய் கோளாறு
**வாயு பிடிப்பு

இதுபோன்ற பல காரணங்களால் வலது பக்க அடி வயிற்றில் வலி ஏற்படுகிறது.சிலர் இவ்விடத்தில் வலி ஏற்பட்டாலே அது குலாவால் அலர்ஜி என்று நினைத்து கவலைக் கொள்கிறார்கள்.உங்களுக்கு எந்த மாதிரி அறிகுறி இருக்கிறது என்பதை பொறுத்து நீங்களே அதற்கான காரணங்களை கணித்துவிடலாம்.

பெண்கள் மாதவிடாய் காலம் நெருங்கும் சமயத்தில் இந்த பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.உங்களுக்கு வாயு பிடிப்பு இருந்தால் இடுப்பு அல்லையில் சுள்ளென்று வலி ஏற்படும்.அதேபோல் சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால் இந்த வலி உண்டாகும்.இதுபோன்ற வலிகளை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் உடனடியாக வலி நிவாரணி மாத்திரையை எடுத்துக் கொள்கின்றனர்.ஆனால் இந்த பழக்கம் தொடர்ந்தால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.எனவே இயற்கையான முறையில் இந்த வலியை குறைக்க முயலுங்கள்.

வலது பக்க அடிவயிற்று வலியை குறைக்கும் மூலிகை பானம்:

தேவையான பொருட்கள்:-

1)வசம்பு ஒரு துண்டு
2)மிளகு – கால் தேக்கரண்டி
3)திப்பிலி – ஐந்து
4)சுக்கு – ஒரு துண்டு
5)கடுக்காய் பொடி – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு துண்டு வசம்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து சுக்கு,திப்பிலி மற்றும் கருப்பு மிளகை குறிப்பிட்டுள்ள அளவுபடி எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த மூன்று பொருட்கள் சேர்த்த திரிகடுக சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

**அடுத்து கடுக்காயை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது அடுப்பில் பாத்திரம் வைத்து 100 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

**பிறகு 10 கிராம் வசம்பு பொடி சேர்த்து கலக்க வேண்டும்.பின்னர் 10 கிராம் கடுக்காய் பொடி மற்றும் 10 கிராம் அளவிற்கு மிளகு,திப்பிலி,சுக்கு கலவையை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

**பின்னர் இந்த பானத்தை இளஞ்சூட்டில் ஆறவைத்து பருக வேண்டும்.இந்த பானத்தை குடித்த சிறு நேரத்தில் வலது அடிவயிற்று வலி குறையும்.பிறகு மருத்துவரை அணுகி தீர்வு காண்பது நல்லது.

Previous articleஅடி வயிற்றுப்பகுதி தொங்கி போக காரணம் உணவு இல்லையாம்!! இது தான் தொப்பை போட காரணமே!!
Next articleநடு முதுகில் மட்டும் அழுத்தம் இறுக்கம் எற்படுதா? அப்போ இனி இந்த தவறை செய்யாதீங்க!!