நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் யோகா,ஆசனம்,உடற்பயிற்சி போன்ற பலவற்றை செய்து வருகின்றோம்.சிலர் ஆரோக்கியமாக டயட்டை பின்பற்றி வருகின்றனர்.நல்ல பழக்கங்கள் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
அதேபோல் நம் ஆயுளை அதிகரிக்க நாம் தினமும் சில விஷயங்களை செய்ய வேண்டும்.நல்ல உணவுப் பழக்க வழக்கங்களுடன் நாம் சில விளையாட்டுகளை விளையாடினால் நமது ஆயுள் அதிகரிக்கும் என்று ஆய்வின் மூலம்சொல்லப்பட்டிருக்கிறது.
ஆயுளை அதிகரிக்கும் விளையாட்டுக்கள்:
தினமும் குறிப்பிட்ட நேரத்தை நமது விளையாட்டிற்காக ஒதுக்க வேண்டும்.விளையாட்டுக்கள் மூலம் நமது உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.தினசரி ஒரு 15 நிமிடங்கள் ஒடு பயிற்சி செய்தால் புற்றுநோய் அபாயம் குறையும்.
டென்னிஸ் விளையாட்டை விளையாடுவதன் மூலம் ஒருவரின் ஆயுட்காலத்தில் மேலும் 9.7 ஆண்டுகள் சேர்க்கிறது.அன்றாடம் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நமது ஆயுளில் மேலும் 3.7 ஆண்டுகள் கூடுகிறது.
கால்பந்து விளையாடுவதன் மூலம் நமது வாழ்க்கையில் 4.7 ஆண்டுகள் சேர்கிறது.பேட்மிட்டன் விளையாடுவதால் நமது வாழ்க்கையின் ஆயுட்காலத்தில் ஆறு வருடங்கள் மற்றும் 2 மாதங்கள் சேர்க்கிறது.
நீச்சல் அடிப்பதால் நமது ஆயுள் காலத்தில் மூன்று வருடங்கள் மற்றும் நான்கு மாதங்கள் சேர்க்கிறது.தினமும் ஜாகிங் செல்வதால் நமது வாழ்க்கையில் மூன்று வருடங்கள் மற்றும் இரண்டு மாதங்கள் கூடுகிறது.நாம் உடல் வியர்வை வெளியேறும் விலையாட்கள் மற்றும் கை,கால்களை அசைக்கும் விளையாட்டுகளில் ஈடுபவதனால் உடல் வலிமை அதிகரிக்கிறது.உடலை பிட்னஸாக வைத்துக் கொள்ள இந்த விளையாட்டுக்கள் உதவுகிறது.இது தவிர நடைபயிற்சி,யோகா போன்றவை மூலமும் ஆயுட்கலாத்தை அதிகரிக்கலாம்.