பள்ளிப் பருவத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும்.குழந்தையின் உடல் ஆரோக்கியம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஆரோக்கிய உணவுகள் கொடுக்கப்படும்.ஆனால் இந்த காலத்து அம்மாக்கள் பலருக்கு ஹெல்தியான உணவு செய்து கொடுக்க நேரம் இல்லாததால் கடைகளில் பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்கப்படும் பண்டங்களை ஸ்நாக்ஸாக வைத்து கொடுத்துவிடுகின்றனர்.
குழந்தைகளுக்கு வீட்டு சாப்பாட்டை விட கடையில் விற்கும் தின்பண்டங்கள் மீது தான் அதிக ஈர்ப்பு ஏற்படுகிறது.இது பொதுவான விஷயம் என்றாலும் குழந்தைகள் கேட்கிறார்கள் என்று ஆரோக்கியம் இல்லாத பொருட்களை வாங்கி தருவது தவறான விஷயமாகும்.
பெரும்பாலான குழந்தைகள் பள்ளி செல்லும் அவசரத்தில் சரிவர காலை உணவை எடுத்துக் கொள்வதில்லை.இதனால் உடல் சோர்வு,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது.ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் தான் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை.
பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு:
1)சோளம்,ராகி,கம்பு,கேழ்வரகு,கருப்பு கவுனி போன்ற தானியங்களை ஊறவைத்து அரைத்து தோசை,இட்லி போன்ற காலை உணவு செய்து கொடுக்கலாம்.
2)கோதுமை மாவில் சப்பாத்தி செய்து காலை உணவாக கொடுக்கலாம்.வெண் பொங்கல் செய்து கொடுக்கலாம்.
3)சில குழந்தைகள் அரிசி மாவு தோசையை விரும்ப மாட்டார்கள்.அவர்களை சாப்பிட வைக்க கலர்புல் தோசை மற்றும் இட்லி செய்து கொடுக்கலாம்.அதாவது பீட்ரூட்,கேரட் போன்ற காய்கறிகளை அரைத்து அரிசி மாவில் கலந்து தோசை,இட்லி செய்து கொடுக்கலாம்.இதற்கு புதினா,கொத்தமல்லி போன்றவற்றை கொண்டு சட்னி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.
4)அதேபோல் கீரை சப்பாத்தி,பீட்ரூட் சப்பாத்தி செய்து கொடுக்கலாம்.காய்கறிகளை அவித்து மிளகுத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம்.காலையில் வேகவைத்த முட்டை ஒன்று கொடுக்கலாம்.
பள்ளி இடைவெளி ஆரோக்கிய தின்பண்டங்கள்:
*குழந்தைகள் தங்கள் பள்ளி இடைவெளி நேரத்தில் ஆரோக்கியமான தின்பண்டங்கள் சாப்பிட வீட்டில் தயாரிக்கப்பட்ட கடலை மிட்டாய்,ஊறவைத்த பாதாம் பருப்பு,உலர் பழங்கள்,பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம்.
மத்திய உணவு:
*காய்கறி பொரியல்,கீரை உணவு,கவுனி அரிசி சாதம்,பருப்பு கூட்டு செய்து தரலாம்.
மாலை நேர உணவு:
*தினமும் ஒரு பருப்பு வகைகளை வேகவைத்து தாளித்து கொடுக்கலாம்.பச்சை பயறு,சுண்டல்,பட்டாணி போன்ற புரதம் நிறைந்த பொருட்களை கொடுக்கலாம்.
*காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்கி சாப்பிடக் கொடுக்கலாம்.காய்கறிகள் கொண்டு சூப் செய்து குடிக்க வைக்கலாம்.
குழந்தைக்கு கொடுக்க கூடாத உணவுகள்:
*மைதா உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.நூடுல்ஸ்,பாஸ்தா,சேமியா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
*அதிக சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்த உணவை கொடுக்க கூடாது.எண்ணெய் உணவுகளை குறைவாக கொடுக்க வேண்டும்.
*பாக்கெட் சிப்ஸ்,சோடா,பர்கர்,பீட்ஸா போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.