இந்த காலகட்டத்தில் வயது பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கும் ஒரு நோய் தான் மாரடைப்பு.சமீப காலமாக இளம் வயது நபர்கள் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை அனைவரும் அறிந்து வருகின்றோம்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஹார்ட் அட்டாக் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்பட்டது.ஆனால் தற்பொழுது காலம் மாறிவிட்டது.உணவுமுறை பழக்கம் மோசமாகி வருவதால் எதிர்காலத்தை நோக்கி இருக்கும் சிறு வயதினருக்கு ஹார்ட் அட்டாக் அச்சுறுத்தும் விஷயமாக இருக்கிறது.
இந்த ஹார்ட் அட்டாக் யாருக்கு எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது.இருப்பினும் சில அறிகுறிகள் நமக்கு உணர்த்திவிடும்.மாரடைப்பு வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும்.இதை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது.
சிலர் மற்ற நாட்களைவிட மிகவும் சோர்வாக இருப்பார்கள்.சிலருக்கு ஒருவித மயக்க உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.சிலர் தடுமாற்றத்துடன் வழக்கத்தைவிட விசித்திரமாக காணப்படுவர்.மயக்கம் இருந்தால் அதை பித்தம் என்று நினைத்து அலட்சியம் செய்யக் கூடாது.
இதுபோன்ற வித்தியாசங்கள் தெரிந்தால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும்.அதற்கு முன்னர் இது சாதாரண பாதிப்பா இல்லை ஹார்ட் அட்டாக்கிற்கான அறிகுறியாக என்பதை நாம் அறிய வேண்டும்.
அதற்கு நீங்கள் பாதிக்கப்பட்டவரை மூன்று விஷயங்களை செய்ய சொல்ல வேண்டும்.முதலில் அவர்களை சிரிக்க சொல்ல வேண்டும்.அடுத்து அவர்களை நன்றாக பேச சொல்ல வேண்டும்.பின்னர் அவர்களின் இரு கைகளையும் மேலே உயர்த்த சொல்ல வேண்டும்.இந்த மூன்றில் ஒன்றை சரியாக செய்ய முடியாமல் தடுமாறினாலும் நீங்கள் சம்மந்தப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
அதேபோல் பாதிக்கப்பட்டவரை நாக்கை வெளியில் நீட்ட சொல்ல வேண்டும்.அவர்கள் நேராக நீட்டிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.அதுவே அவர்கள் இடது அல்லது வலது புறம் பார்த்தவாறு நாக்கை நீட்டினால் அது ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.