இந்த காலகட்டத்தில் பலரும் சந்திக்கும் ஒரு நோய் பாதிப்பாக இதய நோய் உருவெடுத்து வருகிறது.இதய நோய் என்றால் மாரடைப்பு மட்டும் தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இதய நோய் பல உள்ளது.இதயப் பிரச்சனை உள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பாதிப்புகள் உள்ளது.
நன்றாக இருக்கும் நபர்கள் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர்.இது இதய நோய்க்கான காரணமாக இருக்கிறது.ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உணவுமுறை பழக்கமே இதற்கு காரணமாக இருக்கிறது.
இதய நோயான மாரடைப்பும் கார்டியாக் அரெஸ்ட்டும் ஒன்று என்று பலரும் நினைக்கின்றனர்.ஆனால் இரண்டு பாதிப்புகளும் வெவேறானவையாகும்.இதில் கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் ஒரு பாதிப்பாக உள்ளது.
இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உடலில் இரத்த ஓட்டம் முழுமையாக தடைபட்டு பிறகு உயிரிழப்பு ஏற்படும்.தமனிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் பொழுது கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுகிறது.இதய செயல்பாடு நின்றாலும் மூளை மட்டும் ஐந்து நிமிடங்கள் இயங்கும்.அதன் பிறகு உயிரிழப்பு ஏற்படும்.
கார்டியாக் அரெஸ்ட் வர காரணங்கள்:
**இதய தமனி அடைப்பு ஏற்படுதல்
**மோசமான இதயத் துடிப்பு
**இரத்த அழுத்தம்
கார்டியாக் அரெஸ்ட் அறிகுறிகள்:
**திடீர் மயக்கம்
**மூச்சுத் திணறல்
**தலைச்சுற்றல்
**மார்பு வலி
**அதிக உடல் சோர்வு
ஹார்ட் அட்டாக்
இந்த மாரடைப்பு பாதிப்பு என்பது இதய செயலிழப்பால் ஏற்படுகிறது.மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு ஒருசில நிமிடங்களில் உரிய முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிர்பிழைக்க வைக்க வாய்ப்பிருக்கிறது.
மாரடைப்பு ஏற்பட காரணங்கள்:
**மோசமான உணவுப் பழக்கம்
**உயர் இரத்த அழுத்தம்
**குடிக்கு அடிமை
**அதிக புகைப்பழக்கம்
**ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறை
மாரடைப்பு அறிகுறிகள்:
**மார்பு வலி
**முதுகு வலி
**இடது பக்க தோள்பட்டை வலி
**வியர்வை
**படபடப்பு
**கழுத்து வலி
**மார்பு இறுக்கம்