ஹார்ட் அட்டாக் Vs கார்டியாக் அரெஸ்ட்: இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

0
121
Heart Attack Vs Cardiac Arrest: What's the Difference?
Heart Attack Vs Cardiac Arrest: What's the Difference?

முந்தைய காலத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளால் அவதியடைந்து வந்தனர்.ஆனால் இன்று இளம் வயதினருக்கு கூட எளிதில் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் இளம் வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதனால் மக்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வு இருந்தே கொண்டே இருக்கிறது.

இருப்பினும் மாரடைப்பு குறித்த போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயமாக உள்ளது.

இதயம் தொடர்பான நோய்கள் அனைத்தும் ஒரே மாதிரியான அறிகுறிகளை தான் கொண்டிருக்கின்றன.இதனால் மாரடைப்பு,கார்டியாக் அரெஸ்ட்க்கு உள்ள வித்தியாசம் தெரியாமல் போய்விடுகிறது.

இன்றைய காலகட்டத்தில் இதய ஆரோக்கியத்தை அவசியம் மேம்படுத்த வேண்டும்.
மதுப்பழக்கம்,புகைப்பழக்கம்,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்,உடல் உழைப்பு இன்மை போன்ற காரணங்களால் எளிதில் இதய நோய்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை உண்டாக்கி விடுகிறது.

ஹார்ட் அட்டாக்

இயத்திற்குச் செல்லக் கூடிய இரத்த ஓட்டம் குறைந்தாலோ அல்லது தடைபட்டாலோ ஹார்ட் அட்டாக் ஏற்படும்.

ஹார்ட் அட்டாக் அறிகுறிகள்:

1)இரத்தம் உறைதல்
2)இரத்தத்தில் கொழுப்பு படிதல்
3)இதய தமனி அடைப்பு
4)இரத்த குழாயில் கொலஸ்ட்ரால் படிதல்

ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் இதய துடிப்பின் வேகம் அதிகமாகும்.இதனால் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் இதயத்திற்கு செல்ல முடியாமல் இதய செயல்பாடு தடைபடும்.ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

​கார்டியாக் அரெஸ்ட்

திடீரென்று இதயத் துடிப்பு நிற்பதை ​கார்டியாக் அரெஸ்ட் என்று சொல்கிறோம்.இது இதயத்திற்கு இரத்தம் செல்வது தடைபடும் போது நிகழ்கிறது.

கார்டியாக் அரெஸ்ட் அறிகுறிகள்:

1)மூச்சுத் திணறல்
2)நினைவு இழப்பு

இதயம் தொடர்பான எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

Previous articleஇனி சாலை விதிகளை மீறினால் இப்படி அபராதம் கட்ட தேவையில்லை!! வந்தது புதிய நடவடிக்கை!!
Next articleகை கால் ஒரே குடைச்சலா இருக்கா?? உடனே எண்ணையுடன் இந்த 3 பொருட்களை கலந்து தடவுங்கள்!!