நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை…..

Photo of author

By Rupa

நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை…..

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள லத்தேரி பகுதியை சேர்ந்தவர் தான் மோகன் ரெட்டி. இவருக்கு வயது 60 ஆகிறது. இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் 1992 இல் இருந்தே பட்டாசு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மோகன் ரெட்டியின் மகள் வழி பேரக் குழந்தைகள் இருவர் உள்ளனர். அப் பேரன்கள் தனுஷ் மற்றும் தேஜஸ் ஆவர். அவர் இரு பேரக் குழந்தைகளையும் அவருடைய பட்டாசு கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பட்டாசு கடைக்கு தினசரி பட்டாசுகள் வாங்க வாடிக்கையாளர்கள் வந்த வண்ணமே இருக்கும்.அந்த வகையில் மதியம் 12 மணியளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் சிலர் பட்டாசுகளை வாங்கியுள்ளார். புதிய வெடிகளை கேட்டுள்ளார்.

பட்டாசு கடை உரிமையாளரான மோகன் ரெட்டி புதுவகை பட்டாசுகளை காண்பித்துள்ளார். வாடிக்கையாளர் இந்த பட்டாசுகளை வெடித்து காட்டுமாறு கேட்டிருக்கிறார். இவரும் சேம்பிள்காக புதுவகை பட்டாசுகளை கடைக்கு முன் வெடித்து காமித்து இருக்கும்போது எதிர்பாராத வகையில் அச் சம்பவம் அரங்கேறியது,பட்டாசுகள் வெடித்து அந்த நெருப்பானது பட்டாசு கடைக்குள் சென்றது.

கடையில் இருக்கும் அனைத்து பட்டாசுகளும் வெடிக்க தொடங்கியது. கடைக்குள் இருந்த அவரது பெயரை குழந்தைகள் அனைத்து பட்டாசுகளும் வெடிக்க ஆரம்பித்து போது அதிக அளவு பயந்து விட்டனர். பயத்தில் வெளியே ஓடி வராமல் அதிகம் பட்டாசு உள்ள அறைக்கு சென்று விட்டனர். துரதிர்ஷ்டவசமாக அந்த அறையும் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.அவரது பேரன்களை காப்பாற்ற சென்ற மோகன் ரெட்டியும் அந்த அறைக்குள்ளேயே பேரன்களுடன் மாட்டிக் கொண்டார். தீ அதிகமாக பரவியதால் மூவராலும் கடையை விட்டு வெளியே வர முடியவில்லை. தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பட்டாசு கடை முழுவதும் எரிந்து நாசமானது. மக்கள் அனைவரும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றியும், மண்ணை அள்ளி வீசியும் தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்துக் கொண்டே இருந்ததால் அதிகளவு தீயும் பரவியதால் பொதுமக்கள் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. பட்டாசு கடைக்கு அருகில் இருந்த மூன்று பூக்கடைகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கடைகள், இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமடைந்தது. அதன்பின் தீயணைப்புத் துறையினர் வந்து கடையிலுள்ள மோகன் ரெட்டி மற்றும் அவரது பேர குழந்தைகளின் சடலங்களை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக மூவரின் சடலங்களும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேரன்களை காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே சேர்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.