Cricket : இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓய்வு அறிவித்த நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரான ஜடேஜா மனம் உருகி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக மண்ணின் மைந்தனாக இந்திய அணியில் பல சாதனைகள் செய்த இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக வலம் வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று முன்தினம் ஓய்வை அறிவித்தார். திடீரென அறிவித்த இந்த ஓய்வு அறிவிப்பானது அனைவரும் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியானது மழை காரணமாக ஐந்தாவது நாளில் சமணில் முடிவடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின் ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் செய்தியாளர் சந்திப்பில் கூடினர். இதில் அஸ்வின் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த ஓய்வு குறித்து பல ரசிகர்கள் அதிர்ச்சியில் உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்திய அணியின் முக்கிய வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் நான் இத்தனை ஆண்டுகளாக உங்களுடன் டிரெஸ்ஸிங் ரூம்மை பகிர்ந்து கொள்வதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன் என உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ரசிகர்களும் இந்திரன் சந்திரன் இணை ஜோடி இனி இல்லை என வருத்தத்துடன் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.