இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!! வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!! 

0
104
Heat will increase today and tomorrow!! Warning issued by Meteorological Department!!
Heat will increase today and tomorrow!! Warning issued by Meteorological Department!!

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!! வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் ஆகஸ்ட் 7 தேதி முதல் 12 ஆம் தேதி வரை 6 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடம் என்றும், ஆகஸ்ட் 8 ஆம் தேதி  வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி  இன்று முதல் நாளை  வரை கோடை வெப்பத்திற்கு நிகராக வெப்பம் வெளுத்து வாங்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் நாளை 4 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் தாக்கும் என்றும் அறிவித்துள்ளது. மதுரையில் 107.60  டிகிரி, ஈரோடு – 103 டிகிரி ஃபாரன்ஹீட், திருச்சி – 103. 1 டிகிரி ஃபாரன்ஹீட் வேலூர்- 101. 38 என்று தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து கேரளா, கர்நாடக பருவமழை குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் கடல் காற்று திசை மாற்றம் காரணமாக வெயிலின் தங்ககம் அதிகரித்துள்ளது. சென்னையில் 48 மணி நேரம் கடலோர பகுதியில் காற்று மணிக்கும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வெப்ப காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம்  தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென் இலங்கை கடலோர பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று முதல் மணிக்கு 35  கி.மீ. வேகத்தில் வெப்ப காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் வெப்ப காற்று வீசக் கூடும்.

அதனை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் பதிவாகும். மேலும் தமிழகத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை சதம் அடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மதுரையில் அதிகபட்சம் 106. 88 டிகிரி பரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

Previous articleமீண்டும் எம்.பி ஆன ராகுல் காந்தி!! தகுதி நீக்கத்தை வாபஸ் வாங்கிய மக்களவை செயலகம்!!
Next articleகவனம் மக்களே!! அடுத்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது!!