மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு? இனி ஏற்படாமல் இருக்க இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

0
87

மூட்டு வலி,எலும்பு பலவீனம் போன்ற பாதிப்புகளை சரி செய்ய உதவும் பிரண்டை மாதவிடாய் இரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது.பிரண்டையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான இரத்தப் போக்கு பிரச்சனை சரியாகும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)பிரண்டை – ஒரு கப்

2)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

3)உளுந்து பருப்பு – அரை தேக்கரண்டி

4)கடலை பருப்பு – அரை தேக்கரண்டி

5)சின்ன வெங்காயம் – ஐந்து

6)உப்பு – தேவையான அளவு

7)கடுகு – அரை தேக்கரண்டி

8)கறிவேப்பிலை – ஒரு கொத்து

9)வர மிளகாய் – இரண்டு

 

செய்முறை:

 

முதலில் பிரண்டையை தோல் நீக்கிவிட்டு சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.அடுத்து ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து பற்ற வைக்கவும்.சூடானதும் அரை தேக்கரண்டி கடலை பருப்பு மற்றும் அரை தேக்கரண்டி உளுந்து பருப்பை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இதை ஒரு தட்டிற்கு மாற்றிவிட்டு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் பிரண்டை துண்டுகளை போட்டு நன்கு வதக்கி எடுக்க வேண்டும்.

 

அடுத்து இரண்டு வர மிளகாய்,உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.இவற்றை நன்கு ஆறவிட்டு மிக்சர் ஜாரில் சேர்க்க வேண்டும்.அடுத்து வறுத்து வைத்துள்ள கடலை பருப்பு மற்றும் உளுந்து பருப்பை அதில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.அடுத்து கருவேப்பிலை சேர்த்து பொரியவிட்டு அரைத்த பிரண்டை துவையலை போட்டு குறைவான தீயில் வதக்கவும்.

 

இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.இந்த பிரண்டை துவையலை சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப் போக்கு சரியாகும்.

Previous article30 ஆண்டுகால சினிமாவில் ஒரு திரைப்படத்தை மட்டும் இயக்கிய நடிகையர் திலகம்!! காரணம் இது தானா!!
Next articleமகிழ்ச்சியாக உடலுறவை அனுபவிக்க.. ஒவ்வொரு ஆணும் பருக வேண்டிய ரசம் இது!!