கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளி கல்வித்துறை உத்தரவு!!

0
125
#image_title

கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளி கல்வித்துறை உத்தரவு!!

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி புயலாக வலுக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பிலிருந்து வரை தற்பொழுது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களை கனமழை ஒரு பதம் பார்த்து வருகிறது. தொடர் கனமழையால் தலைநகர் சென்னை வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

இந்நிலையில்தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற டிசம்பர் 3 அன்று புயலாக வலுக்க கூடும் எனவும் இந்த புயலுக்கு மிக்ஜாம் எனவும் பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த புயல் டிசம்பர் 4 அன்று சென்னைக்கும் அண்டை மாநிலமான ஆந்திராவின் மச்சிலிபட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் வருகின்ற 4 ஆம் தேதி வரை சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் காரணத்தினால் நாளை டிசம்பர் 2 ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித் துறை தெரிவித்து இருக்கிறது

Previous articleமழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாருதல் பணிகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!
Next articleகேரளா ஸ்டைல் “தேங்காய் பால் பிஸ் குழம்பு” – மணக்கும் சுவையில் செய்வது எப்படி..?