அடுத்த நான்கு தினத்திற்கு வெளுத்து வாங்கும் கனமழை!!

Photo of author

By Vinoth

வங்கக்கடலில் நிலவிய காற்று அழுத்த தாழ்வு பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவே காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து அதே இடத்தில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்தால் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியில் கரையை கடக்கும்.

அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி பயணித்த ஆந்திர கடலோர பகுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  இன்றும் நாளையும் விடுவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இன்று முதல் 24-ஆம் தேதி வரை பரவலாக மற்றும்  மிதமான மழை பெய்யும் கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மற்றும் பரவலாக நல்ல மழை பெய்யும் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீச கூடும். இன்று காலை 8:30 மணி முதல் முடிந்த 24 மணி நேரப்படி அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 90 மில்லி மீட்டர் ஸ்ரீவில்லிபுத்தூரில் 70 மில்லி மீட்டர் பத்ராயிருப்பில் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என  வானிலை மையம் கூறியுள்ளது.