அடுத்த இரண்டு நாட்களுக்கும் கனமழை! எந்தெந்த இடங்களில் தெரியுமா?
கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு தென்கிழக்கு பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் புயலாக வலுபெற்றது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.
அப்போது மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம்,காரைக்கால்,புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து,மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பக்கபட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கபட்டிருந்த நிலையில் அது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.
இந்நிலையில் மீண்டும் மழை பொழிய தொடங்கி உள்ளது.அதனால் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை பொழிய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.வட தமிழகத்தில் ஓரிரு நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் வரும் ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.