வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Photo of author

By Vinoth

வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Vinoth

Heavy rain in Tamil Nadu till 10th!! Chennai Meteorological Center Announcement!!

தற்போது வடகிழக்கு பருவ மழை முன்னதாக பொழிந்தது வருகிறது. அதன் காரணமாக தற்போது சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மிதமான மழை 10-ம் தேதி  வரை நீடிக்கும். மேலும்  கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும்  வரும் 10-ம்  தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

புதுச்சேரி அருகே கரையை கடந்த புயல் தற்போது கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக பரவியுள்ளது. இத்துடன் அங்கு வளிமண்டல சுழற்சியும் இணைந்து காணப்படுகிறது. அதன் காரணமாக லட்சத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.