அடுத்த 3 நாட்களுக்கு இந்த 14 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

0
98

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலைவி வருகிறது. ஆகவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை ,கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், போன்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மயிலாடுதுறை தஞ்சை நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த மாவட்டங்களில் வரும் 26 ஆம் தேதி வரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவலாம் என்று சொல்லப்படுகிறது.

நேற்று காலை நிலவரத்தினடிப்படையில், 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் வேலப்பன்சாவடியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆண்டிப்பட்டி, பண்ருட்டி, போன்ற பகுதிகளில் 7 சென்டிமீட்டர் மழையும், சென்னை விமான நிலையம் பகுதியில் 6 சென்டிமீட்டர் மழையும், மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், மயிலாப்பூர், போன்ற இடங்களில் 5 சென்டிமீட்டர் மழையும், கோட்டூர்புரம் அம்பத்தூர் மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 சென்டிமீட்டர் மழையும், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழையும், பதிவாகியுள்ளது.

குமரி கடல் மன்னார் வளைகுடா தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே நாளை வரையில் அந்த பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.