Home State தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகுமா? பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகுமா? பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

0
தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகுமா? பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

கடந்த மாதம் 11ம் தேதி கூட்டப்பட்ட அஇஅதிமுக பொதுக்குழுவை செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூட்டிய அதிமுகவின் பொது குழு மற்றும் செயற்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை வகித்து வந்த பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வந்தார்.

இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் பழனிச்சாமி தரப்பு ஜூலை மாதம் 11-ம் தேதி ஊட்டிய பொதுக்குழு செல்லாது. ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே கட்சியில் தொடரும். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலின்றி நிர்வாக குழு அல்லது பொதுக்குழு உள்ளிட்ட கூட்டத்தை கூட்ட இயலாது என்று தெரிவித்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்க்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனு நீதிபதியின் உத்தரவை முறை படுத்த இயலாது. அரசியல் கட்சியின் உள் விவகாரங்களில் நேரடியாக தலையிடுவதாக இருக்கிறது.

பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணிப்பதாகவும், இருக்கிறது. கட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் மட்டுமல்லாமல் பெரும்பான்மையினரின் விருப்பத்திலும், இந்த உத்தரவு குறுக்கீடு செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்ய வேண்டும் அதுவரையில் அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது மேலும் தனி நீதிபதியின் உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகலின்றி மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கி விசாரணைக்கு பட்டியலிட கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த கூடுதல் மனு நீதிபதிகள் எம் துரைசாமி, சுந்தர மோகன், அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதாடினார்.

அவருடைய வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணையை இன்றைய தினத்திற்கு பட்டியலிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர் ஆகவே இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தாக்கம் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை நடைபெறுமா? என்ற ஆர்வம் கூடியிருக்கிறது.

மேலும் அந்த மனுக்கள் மீதான விசாரணையின் முடிவில் நீதிபதிகள் என்ன மாதிரியான தீர்ப்பை வழங்குவார்கள்? தனி நீதிபதியின் தீர்ப்பு சரிதான் என்று தெரிவிப்பார்களா? அல்லது இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி உத்தரவிடுவார்களா? என பல்வேறு விதமான கேள்விகள் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது.

மேலும் இதற்கு முன்பாகவே ஒரு நீதிபதி விசாரணை செய்து கொண்டிருந்த சமயத்தில் அவர் விசாரணை செய்வதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பன்னீர்செல்வம் தெரிவித்ததை தொடர்ந்து அந்த நீதிபதி பன்னீர்செல்வத்திற்கு கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பை போக்கும் விதமாக அவரிடம் பன்னீர்செல்வம் மன்னிப்பு கூறினார். இதனை தொடர்ந்து தான் ஜெயச்சந்திரனை தனி நீதிபதியாக நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.