அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்!

0
371
Heavy rain in these districts in the next 2 hours! Check if your town is on this list!
Heavy rain in these districts in the next 2 hours! Check if your town is on this list!

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஓரிரு நாட்களில் புயலாக  வலுபெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

அதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி கனமழை என அறிவித்திருந்த  பகுதிகளுக்கு  அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டனர்.

மேலும் தமிழகத்தில் கனமழையின் காரணமாக ஒருசில பகுதிகள் சேதம் அடைந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் தான் மழையின் தாக்கம் குறைய தொடங்கியது. கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகளவு காணப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அந்த வகையில் இன்று காலை முதலே தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் சாரல் மழையாக விட்டு விட்டு பெய்து வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த இரண்டு  மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் மிதமான  மழை பெய்யக்கூடும். அந்த வாகையில் தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Previous articleஉஷார் மக்களே புதுவகை வைரஸ் பரவல்! 5 குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாப பலி! 
Next articleஇங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!