உஷார் மக்களே புதுவகை வைரஸ் பரவல்! 5 குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாப பலி! 

0
203
#image_title

உஷார் மக்களே புதுவகை வைரஸ் பரவல்! 5 குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாப பலி! 

புதுவகை வைரஸ் பரவி வருவதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஐந்து குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

அங்கு 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகள் நுரையீரல் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் சமீப காலமாக அடினோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள இரு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அதிகமாகி அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

24 மணி நேரத்தில் ஐந்து குழந்தைகள் உயிரிழந்து  இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதற்கு காரணம் அடினோ வைரஸ் என்று மருத்துவர்களால் இன்னும் உறுதியாக கூற முடியவில்லை. இது பற்றி அரசின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

அந்த 5 குழந்தைகளும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியால் இறந்துள்ளன. அதில் ஒரு ஒன்பது மாத குழந்தையும் அடக்கம். அந்தக் குழந்தைகளின் பிரேத பரிசோதனை மற்றும் சோதனை அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அந்த முடிவுகள் வந்த பிறகு தான் குழந்தைகள் அடினோ வைரஸால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரிய வரும் என்று தெரிவித்தார்.