அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!
அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்வதால் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் கடலோரப்பகுதிகளில் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதே போல தென்தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் வரும் அக்டோபர் 29ம் தேதி தமிழகத்தில் 12 மாவட்டங்களிலும், 30ம் தேதி தமிழகத்தில் 16 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று(அக்டோபர்27) தமிழகம் உள்பட புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் நாளை(அக்டோபர்28) தமிழகம் உள்பட புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அக்டோபர் 29ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு.சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. மேலும் தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
அதே போல அக்டோபர் 30ம் தேதி தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், நீலகிரி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, தூத்துக்குடி ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
மேலும் அக்டோபர் 31ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல நவம்பர் 1ம் தேதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.