கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!!

0
34
#image_title

கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!!

கோவை மாவட்டத்தில் இருந்து கோவாவிற்கும், ஜெய்ப்பூர்க்கும் சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு என்று தமிழகத்தில் இருந்து பாரத் கவுரவ் சுற்றுலா இரயில் இயக்கப்படவுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

தமிழகத்தில் இருந்து கோவா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு என்று இந்த பாரத் கவுரவ் இரயில் இயக்கப்படவுள்ளது. மேலும் இந்த பாரத் கவுரவ் இரயில் ஓற்றுமை சிலை என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை காணும் வகையில் இந்த சுற்றுலா அமையும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

கோவை மாவட்டத்தில் புறப்படும் இந்த பாரத் கவுரவ் சுற்றுலா இரயில் இந்த சுற்றுலா பயணம் கோவா, ஜோத்பூர், ஜெய்சால்மர், ஜெய்ப்பூர், அஜ்மீர், உதய்பூர், சர்தார் வல்லபாய் படேல் சிலை ஆகிய இடங்களுக்கு செல்லவுள்ளது. மேலும் கோவை டூ கோவா, ஜெய்ப்பூர், வல்லபாய் படேல் சிலை சுற்றுலா நவம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

மேலும் இரயில்வே நிர்வாகம் இதற்கான கட்டணத்தை பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மொத்தம் 13 நாட்கள் சுற்றுலா பயணம் இருக்கப் போகின்றது. எனவே இந்த 13 நாட்கள் சுற்றுலாவிற்கு பாரத் கவுரவ் இரயிலில் படுக்கை வசதிக்கு 21600 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல படுக்கை வசதி கொண்ட எகானமி ஏசி வகுப்பிற்கு 31400 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3ம் வகுப்பு ஏசி கட்டணமாக 36700 ரூபாயும், 2ம் வகுப்பு ஏசி கட்டணமாக 43500 ரூபாயும், முதல் வகுப்பு ஏசி கட்டணமாக 50900 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றிய கூடுதல் தகவல்களை பெறுவதற்கு 7305858585 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.