தொடர் மழை காரணமாக..20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!!

0
266

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ‌அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும். மேலும், ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கடலூர், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 20 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Previous articleஅதிமுக ஜாதிக்கட்சி.!! ஓபிஎஸ்-இபிஎஸை விமர்சித்த கருணாஸ்.!!
Next articleஇனி ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது.! கல்லூரி நிர்வாகங்கள் அறிவிப்பு.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here