BREAKING: தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

0
153

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக உள்ளது அதனால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக, கடந்து ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கரையை நோக்கி நகர்வதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் கூறியுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே, தமிழகத்தில் கனமழை காரணமாக கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில்.

தற்போது தூத்துக்குடியில் பள்ளிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Previous articleஉச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!
Next articleசென்னையில் இன்று (30-10-2021) இந்த இடங்களில் மின்தடை.!!