10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் தகவல்!! 

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் தகவல்!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்கள் கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த மழை கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வாங்க கடல் பகுதியில் திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் மேல் நிலவும் வழி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாட்டில் மழைக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து புதுச்சேரி பகுதியில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல்,சேலம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர்  மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை மற்றும் நீலகிரி  மாவட்டங்களில் இன்றும்  நாளையும்  கனமழை பெய்யும் என்று வானிலை மயம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தற்போது மேற்கு திசை காற்றின்  வேக மாறுபாடு காரணமாக ஜூலை 14  முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னர் வளைகுடா பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளது.