11 மாவட்டங்களுக்கு வரும் டிசம்பர் 31 வரை கனமழைக்கு எச்சரிக்கை!!

0
97
Heavy rain warning for 11 districts till December 31!!
Heavy rain warning for 11 districts till December 31!!

சென்னை: தமிழகத்தில் கடந்த 1 மாதம் காலமாக பல மாவட்டங்களில் கனத்தமழை முதல் வெள்ளம் வரை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துவிட்டதுஎன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வலுவிழப்பு காரணமாக இன்று முதல் 31-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக இன்று மாலை 3 மணி வரை சென்னை சென்டிரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், சேத்துப்பட்டு, புரசைவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், புதுப்பேட்டை, அண்ணாசாலை, வடபழனி, அசோக் நகர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 2 நாட்களுக்கு 13  மாவட்டங்களில் அதாவது கடலூர், விழுப்புரம், கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், தி.மலை, திருச்சி, ராணிப்பேட்டை, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை முதல் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் லேசான மழை விட்டு விட்டு பொழிந்தது வருகிறது.

Previous articleஅதிபரான உடனே இதை செய்வேன்!! டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு!! அச்சத்தில் அலறிய கனடா!!
Next articleஎம்ஜிஆர்- கே இங்கு மரியாதை இல்லை.. அதிமுக-வுடன் கூட்டணி ஒருபோதும் கிடையாது!! கட்டன் ரைட்டாக சொன்ன விஜய்!!