தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை மண்டலத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதியில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பநிலை பொருத்தவரை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரை, புதுக்கோட்டை திருமயம் பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும்,சிவகங்கை தேவகோட்டையில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும், செப்டம்பர் 26 (இன்று) 11:30 மணி வரை தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதிகளின் அலை 1.8 முதல் 2.8 மீட்டர் வரை உயரக்கூடும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.