டெல்லியில் பலத்த மழை : போக்குவரத்து ஸ்தம்பித்தது

Photo of author

By Parthipan K

டெல்லியில் பலத்த மழை : போக்குவரத்து ஸ்தம்பித்தது

Parthipan K

டெல்லியில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் இந்த சூழ்நிலையில் இந்திய வானிலை மையம் தலைநகருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கன மழையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முட்டிவரை தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது குறிப்பாக ஆசாத் மார்க்கெட், பிரதாப் நகர் ஆகிய இடங்களில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ள நிலையில் ஆக்ரா_டெல்லி இடையிலான இருப்புப் பாதைகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பதினைந்துக்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக சென்றன.
ஆகஸ்ட் மாதம் டெல்லியில் 144.7மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் செப்டம்பர் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.