ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி!

0
82
Police department should punished when lgbt peoples got suffered
Police department should punished when lgbt peoples got suffered

ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை உயர்நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோரை துன்புறுத்தும் போலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் கொண்டுவர தமிழக அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில் பின்னர் அவர்கள் காதலிக்கத் தொடங்கினர்.இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர்.இதற்கு இவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரும் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.ஒரு தொண்டு நிறுவனக் காப்பகத்தில் தங்கி வேலை தேடி வந்துள்ளனர்.இதனால் அந்த பெண்களின் பெற்றோர்கள் அவர்களை காணவில்லை என்று போலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் மீது பதிவு செய்த வழக்கில் அந்த இரண்டு பெண்களும் தங்களைத் துன்புறுத்தக் கூடாதென்றும் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஓரினச்சேர்க்கையாளர்கள் நலன்களை அங்கீகரிப்பது தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி நீதிமன்றம் அதை அமல்படுத்த எடுத்த முன்னெடுப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஓரினச்சேர்க்கையாளர்களும் மூன்றாம் பாலினத்தவர்களும் காவல்துறையால் துன்பங்கள் அனுபவிக்கக் கூடாதெனவும் அவர்களை எப்படி கையாள வேண்டும் எனவும் இது குறித்து காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சமூகத்தினரை காவல்துறை துன்புறுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அவர் காவல்துறை நடத்தை விதிகளில் புதிய விதிகள் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.மேலும் ஒடுக்கப்பட்டோர் நலன்களுக்கு பல சீர்திருத்தங்களை செய்த மாநில அரசு இவர்கள் முன்னேற சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

author avatar
Parthipan K