தற்போது பெய்து வரும் கனமழையால் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு!
தமிழகம் முழுவதுமே வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இது அந்த பருவம் தான் என்றாலும் இந்த வருடம் எப்பொழுதும் வரும் மழை பொழிவை காட்டிலும் கூடுதலான மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. ஆனால் இந்த முறை கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே இயற்கை பேரிடர்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
கடற்கரையோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள பலருக்கும் இது மிகப்பெரும் ஒரு சவாலான கால நிலையாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் கடந்த அக்டோபர் மாதம் முதல் இன்று வரை 451.3 மில்லி மீட்டர் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 60 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், கடலூர் மற்றும் புதுச்சேரியிலும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், காலையில் இருந்தே அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியதோடு, அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. அதுவும் கடற்கரை அருகில் எல்லாம் மிகவும் அதிகமாக அதுவும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் உள்ளது. அந்த வீடியோக்களை எல்லாம் இங்கு பார்க்கலாம்.
காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 340 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ. உயரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை மற்றும் புதுச்சேரிக்கு நடுவில் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.