கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை,கோவை ஈரோடு,சேலம்,தர்மபுரி கிருஷ்ணகிரி,நீலகிரி,நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.வானிலை மையத்தின் நேற்றைய அறிவிப்பு படி மேற்கு தொடர் மலையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது.
தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பில்லுர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.?இதனால் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்த கனமழையால் அணைக்கு வரும் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.