ஹெலிகாப்டர் சகோதர்கள் பண்ணை வீட்டில் பதுங்கிருந்த போது கைது!! உதவி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை!!
ஹெலிகாப்டர் சகோதர்கள் என்பவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த சகோதரர்கள் எம்.ஆர். கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் இருவரும் பெரிய தொழிலதிபர்கள்.
இருவரும் சேர்ந்து பல நிதி நிறுவனம் ,பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு தொழில்கள் செய்து வந்துள்ளார்கள்.
மேலும் இவர்களுக்கு என்று சொந்தமான ஹெலிகாப்டர் தளம் மற்றும் ஹெலிகாப்டர் உள்ளது. இந்நிலையில் சகோதரர்கள் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்று கூறி மக்களை ஏமாற்றி உள்ளார்கள்.மேலும் பணத்தை மீண்டும் மக்களுக்கு தராமல் ஏமாற்றி இருந்துள்ளார்கள்.
இந்நிலையில் இவர்கள் 15 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக துபாயில் வசிக்கும் தம்பதி புகார் அளித்துள்ளார்கள். இதனையடுத்து போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். மேலும் இவர்கள் தலைமறைவாக புதுக்கோட்டை பண்ணை வீட்டில் பதுங்கி இருந்தனர். அதற்கு அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உதவி காவல் ஆய்வாளர் சோமசுந்திரம் மற்றும் கண்ணன் 10 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து புகார் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கமாறு காவல் கண்காணிப்பு ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.