உத்தரகாண்டில் கொல்லப்பட்ட இளம் பெண் குடும்பத்திற்கு உதவி! முதல்வர் வெளியிட்ட  அறிவிப்பு! 

Photo of author

By Parthipan K

உத்தரகாண்டில் கொல்லப்பட்ட இளம் பெண் குடும்பத்திற்கு உதவி! முதல்வர் வெளியிட்ட  அறிவிப்பு! 

Parthipan K

The announcement made by the central government! Increase in basic salary for them!

உத்தரகாண்டில் கொல்லப்பட்ட இளம் பெண் குடும்பத்திற்கு உதவி! முதல்வர் வெளியிட்ட  அறிவிப்பு! 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான வினோத் ஆரியாவின் மகன் புல்கித் ஆரியா, இவர் ரிஷிகேசில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி என்பவர் கடந்த 18ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து விசாரணையில் விடுதியின் உரிமையாளர் புல்கித் ஆரியா மற்றும் விடுதி ஊழியர்கள் சேர்ந்து அங்கீதாவை கொலை செய்திருப்பது கடந்த 23ஆம் தேதி தெரிய வந்தது.

ரிஷிகேசில் உள்ள கால்வாயில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டு, இந்த கொலை வழக்கு தொடர்பாக புல்கித் ஆரியா, விடுதி மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட அங்கிதா பண்டாரி குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.