மூட்டு வலியை விரட்டும் மூலிகை குழம்பு!! வாரம் 1 முறை சாப்பிட்டால் போதும்!!
30 35 வயதை கடந்து விட்டாலே போதும் பெரும்பாலானோருக்கு மூட்டுவலி பிரச்சினை உண்டாகி விடுகிறது. எலும்புகளின் தேய்மானம் என ஆரம்பித்து பலவற்றால் மக்கள் பெருமளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இதனை சரி செய்யும் வகையில் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அங்கு கொடுக்கும் மருந்து மாத்திரைகளை அவ்வபோது சாப்பிட்டும் வருகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் எலும்புகளில் கால்சியம் குறைபாடு இருப்பது தான்.
ஆரம்பகட்ட காலத்தில் இருந்து உணவில் போதுமான அளவு கால்சியம் எடுத்துக் கொண்டாலே நாளடைவில் இவ்வாறான பிரச்சனையை எளிதாக தவிர்க்கலாம். அதேபோல சத்து நிறைந்த உணவு பொருட்களையும் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் இதுபோல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
மாறுபட்ட உணவு பழக்க வழக்கத்தினாலே இன்றைய காலகட்டத்தில் பல நோய்களில் மக்கள் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் மூட்டு வலிக்கு என்று சித்த மருத்துவத்தில் ஓர் தனி வகை குழம்பு உள்ளது. இதனை வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வந்தாலே போதும் நாளடைவில் மூட்டு வலி பிரச்சனை நிவர்த்தி ஆகும்.
தேவையான பொருட்கள்:
சங்கிலை
பொடுதலை
வாதநாராயணன்
வல்லாரை
கருவேப்பிலை
அரிசி திப்பிலி
கண்ட திப்பிலி
வால் மிளகு
வெள்ளை மிளகு
அமுக்கிரா கிழங்கு
சதக் குப்பை
சுக்கு மற்றும் மிளகு
மேலே உள்ள அனைத்தும் சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும்.
செய்முறை:
மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையிலும் சம அளவு எடுத்துக் கொண்டு வெயிலில் நன்கு காய் வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு புளியாரை கீரையை எடுத்து அதனை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் தயார் செய்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு சேர்த்து கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதித்த பிறகு பூண்டு சின்ன வெங்காயம் தேவையான அளவு உப்பு போட்டு இறக்கி விட வேண்டும்.
மூட்டு வலிக்கான மூலிகை குழம்பு தயாராகி விட்டது. இதனை வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர நல்ல மாற்றத்தை காணலாம்.