நெஞ்சு சளியை உருக்கி நாசியில் வெளியேற்றும் மூலிகை பானம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

நெஞ்சு சளியை உருக்கி நாசியில் வெளியேற்றும் மூலிகை பானம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Divya

மார்பு பகுதியில் படிந்திருக்கும் கெட்டி சளி இளகி வெளியேற சில மூலிகை வைத்தியங்களை செய்யலாம்.நெஞ்சு சளி பாதிப்பை அசால்ட்டாக விட்டால் சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.ஆகவே சளியை கரைத்து தள்ளும் மூலிகை பானத்தை தயாரித்து மூன்று தினங்கள் பருகி பலனடையுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)இஞ்சி – ஒரு துண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
4)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் இஞ்சி துண்டை தண்ணீரில் போட்டு அலசி மண்ணை நீக்கிவிட வேண்டும்.பிறகு அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.

2.அடுத்து இந்த இஞ்சி துண்டுகளை மெல்லியாக வடிவில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை பாத்திரம் ஒன்றில் சேர்த்துக் கொள்ளவும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

3.பிறகு இஞ்சி பானத்தை கிளாஸ் ஒன்றில் வடிகட்டி கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

4.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த பானத்தை தொடர்ந்து மூன்றுவேளை பருகி வந்தால் மார்பில் கட்டியிருந்த கெட்டி சளி கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி – இரண்டு தேக்கரண்டி
2)இஞ்சி – ஒரு துண்டு
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து இதனை சிறு சிறு துண்டுகளாக்க நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.இதில் இஞ்சி துண்டுகளை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

3.அதன் பிறகு துளசி இலைகளை அதில் போட்டு சுண்டக் காய்ச்ச வேண்டும்.இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் நெஞ்சு சளி கரைந்து வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்பூரவல்லி இலை – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.இரண்டு கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் போட்டு அலசி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து இதை பாத்திரம் ஒன்றில் போட்டு ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.இந்த கற்பூரவல்லி பானத்தை வடிகட்டி பருகினால் நெஞ்சு சளி பாதிப்பு குணமாகிவிடும்.