உடல் சோர்வை போக்கும் மூலிகை மில்க்!! இந்த பொருட்கள் இருந்தாலே போதும்!!

Photo of author

By Divya

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான ஒரு பாதிப்பு உடல் சோர்வு.உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலவீனமாகிவிடும்.எனவே உடலை திடமாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பாலை செய்து காலை மற்றும் மாலை நேரத்தில் டீ,காபிக்கு பதில் அருந்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பசும் பால் – ஒரு கப்
2)பாதாம் பருப்பு – 10
3)முந்திரி பருப்பு – 10
4)வெள்ளை சர்க்கரை – கால் கப்
5)ஏலக்காய் – ஒன்று
6)பட்டை – ஒரு துண்டு
7)இலவங்கம் – இரண்டு
8)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் பசும் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு 10 முந்திரி பருப்பு மற்றும் 10 பாதாம் பருப்பை வாணலியில் போட்டு லேசாக வறுத்து ஆறவிடுங்கள்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக்கி கொள்ளுங்கள்.

பிறகு 1/4 கப் சர்க்கரை மற்றும் ஒரு ஏலக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.

அதற்கு அடுத்ததாக ஒரு துண்டு பட்டை மற்றும் இரண்டு கிராம்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது சூடாகி கொண்டிருக்கும் பாலில் அரைத்த பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பு பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் அரைத்த வெள்ளை சர்க்கரை சேருங்கள்.அதற்கு அடுத்து பட்டை மற்றும் கிராம்பு(இலவங்கம்) பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

பால் நன்கு கொதித்து வந்ததும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் காய்ச்சவும்.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும்.