குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் சளி,இருமலால் அவதியடைந்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களாகவே பருவமழை பெய்து கொண்டிருப்பதால் தொற்றுக் கிருமிகள் பரவல் அதிகரித்து ஜலதோஷம்,நெஞ்சு சளி,இருமல்,காய்ச்சல்,தும்மல் போன்ற பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த சளி இருமலை குணமாக்க மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இல்லை.பாலில் சுக்கு,மிளகு மற்றும் மேலும் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் மழைக்கால நோய்கள் அனைத்தும் சில தினங்களில் குணமாகிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)சுக்கு – சிறு துண்டு
2)பால் – ஒரு கிளாஸ்
3)ஏலக்காய் – ஒன்று
4)மிளகு – இரண்டு அல்லது மூன்று
5)தேன் – தேவையான அளவு
செய்முறை:
படி 01:
முதலில் ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
படி 02:
பிறகு ஒரு ஏலக்காய் எடுத்து அதன் விதைகளை தனியாக பிரித்து உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
படி 03:
அதேபோல் இரண்டு அல்லது மூன்று கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து ஒரு சுக்கு ஏலக்காய் தூள் கொட்டி வைத்துள்ள தட்டில் சேர்த்துக் கொள்ளவும்.
படி 04:
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றிக் கொள்ளவும்.பசும் பால் கிடைக்காதவர்கள் பாக்கெட் பால் ஒரு கிளாஸ் ஊற்றிக் கொள்ளுங்கள்.
படி 05:
பால் ஒரு கொதி வந்ததும் இடித்து வைத்துள்ள கரு மிளகு,ஏலக்காய் மற்றும் சுக்குத் தூளை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
படி 06:
காய்ச்சிய பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் சளி,இருமல்,தும்மல்,ஜலதோஷம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
இந்த மூலிகை பாலை காலை,மாலை அல்லது இரவு என மூன்று தினங்கள் குடிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு 1/4 கிளாஸ் குடித்தால் போதுமானது.பெரியவர்கள் தாராளமாக ஒரு கிளாஸ் பால் பருகலாம்.