கட்டுக்கடங்காத சளி இருமலை கன்ட்ரோல் செய்யும் மூலிகை மாத்திரை!! சாப்பிட்ட உடனே பலனை காணலாம்!!

Photo of author

By Divya

கட்டுக்கடங்காத சளி இருமலை கன்ட்ரோல் செய்யும் மூலிகை மாத்திரை!! சாப்பிட்ட உடனே பலனை காணலாம்!!

தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.இதனால் மழைக்கால நோய் பாதிப்புகளான சளி,இருமல் உள்ளிட்டவை ஏற்படத் தொடங்கி விட்டது.இந்த பாதிப்புகளை மூலிகை மாத்திரை சாப்பிட்டு குணமாக்கி கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு
2)தாளிசபத்திரி
3)சுக்கு
4)அரிசி திப்பிலி
5)கற்கண்டு

இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு,50 கிராம் தாளிசபத்திரி இலை,சிறிய துண்டு சுக்கு,2 அரிசி திப்பிலியை வெயிலில் நன்கு காய வைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

பின்னர் சிறிது கற்கண்டு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மூலிகை பொடியில் போட்டு கலந்து விடவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 50 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கி எடுத்துக் கொள்ளவும்.இந்த நீரை மூலிகை பொடியில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மாவு போல் பிசையவும்.

பின்னர் இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைத்துக் கொள்ளவும்.இந்த உருண்டையை ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமிக்கவும்.

காலை,இரவு உணவிற்கு பின்னர் ஒரு உருண்டை சாப்பிட வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 3 நாட்கள் செய்தால் கட்டுக்கடங்காத சளி,இருமல் கட்டுப்படும்.

இந்த மூலிகை உருண்டையில் சேர்க்கப்பட்டுள்ள தாளிசபத்திரி ஒரு மரத்தின் இலை ஆகும்.இந்த இலையில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.இதை காயவைத்து பொடியாக்கி வெது வெதுப்பான நீரில் போட்டு குடித்து வந்தால் புற்றுநோய்,மூச்சு திணறல்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட ஆபத்தான பாதிப்புகள் குணமாகும்.