நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மூலிகை பொடி!! தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!!

Photo of author

By Divya

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மூலிகை பொடி!! தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!!

Divya

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள்.இதை தொடர்ந்து செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் தண்ணீர் விட்டான் கிழங்கை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கிண்ணம் ஒன்றில் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

நாட்டு மருந்து கடையில் அமுக்கிரா கிழங்கு பொடி கிடைக்கும்.இதை 100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து கிண்ணம் ஒன்றில் அமுக்கிரா கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)நிலப் பனங்கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு நிலப் பனங்கிழங்கை வெயிலில் காயவைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.பின்னர் கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு பனங்கிழங்கு பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி கலந்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.