சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

Divya

Herbal powder to help reduce sugar level quickly!! Try it today!!

சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

உலக நாடுகளை ஒப்பிடுகையில் நம் இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.பரம்பரை தன்மை,மாறி வரும் உணவுமுறை பழக்கம்,அதிக உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் சுகர் லெவல் அதிகமாகிறது.

எனவே சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹெர்பல் பொடியை பயன்படுத்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு சுண்டல்
2)நெல்லைக்காய்
3)வெந்தயம்
4)மாங்காய் பருப்பு
5)கருஞ்சீரகம்
6)கற்றாழை
7)பாகல் இலை
8)கொய்யா இலை

செய்முறை:-

10 நெல்லிக்காயை விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை வெயிலில் காய வைத்து வற்றலாக்கி கொள்ளவும்.அதேபோல் கற்றாழையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு காய வைத்து வற்றலாக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு கைப்பிடி அளவு பாகல் இலை,ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலையை வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் 25 கிராம் கருப்பு சுண்டல் மற்றும் 25 கிராம் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற விடவும்.அதன் பின்னர் இதை ஒரு காட்டன் துணியில் போட்டு மூளைக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதை வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து காய வைத்த கொய்யா இலை,பாகல் இலை,நெல்லிக்காய் வற்றல்,கற்றாழை வற்றல்,கருப்பு கொண்டைக்கடலை,வெந்தயம்,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் 50 கிராம் மாங்காய் பருப்பை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த ஹெர்பல் பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் சர்க்கரை பாதிப்பு முழுமையாக குணமாகும்.